Submission Form - சமர்ப்பிப்புப் படிவம் - கீழே

படைப்பாளர் மற்றும் படிப்பாளர் ஆகியோருக்கான திடல்

கற்க. கசடற எழுதுக. எழுத்தால் கற்பித்திடுக.

காட்டுஞ்ரி இதழுக்கு உங்களை வரவேற்கிறோம்.

உள்ளூர்த் திறனாளிகளுக்கு ஓர் உலகளாவிய ஊடகம்! உலகு நோக்கும் வாசகர்களுக்கு ஓர் உள்ளூர் ஊடகம்!

KaattuManjari, a Tamil electronic magazine, published quarterly, to showcase local creativity.

காட்டுஞ்ரி ஆசிரியர் குழு

துரைசாமி நவநீதம், எஸ். முத்துக்கண்ணு, ஆ. இரா. பாரதராஜா

Archives : Download KaattuManjari

காட்டுஞ்ரியின் இதழ்களை இறக்கம் செய்க

Oct 2021 | 2021 : 8 PDF

Jul 2021 | 2021 : 7 PDF

Apr 2021 | 2021 : 6 PDF

Jan 2021 | 2021 : 5 PDF HTML

Sep 2020 | 2020 : 4 PDF HTML

Jun 2020 | 2020 : 3 PDF HTML

Apr 2020 | 2020 : 2 PDF HTML

Jan 2020 | 2020 : 1 PDF HTML

படைப்பாளர் கவனத்திற்கு - Instructions to Author

1. காட்டுஞ்ரிக்கு அனுப்பப்படும் படைப்புகள் அசலாக, படைப்பாளரின் சொந்த சிந்தனைகளின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.

2. படைப்புக்கள் தெளிவான கருத்துக்களை உள்ளடக்கி படிப்போரின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

3. வேறு எங்கோ முன்பே இதழ்களில் வெளியான மற்றொருவரின் படைப்பினைத் தனதென கூறிக் கொண்டு மற்றுமொரு இதழில்வெளியிட முயல்வது படைப்பாளர் தர்மமன்று. சட்டத்திற்கும் புறம்பானது!

4. படைப்புகள் ஆராயப்பட்டு தகுதியான படைப்புக்களை ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்துப் பிரசுரிக்கும்.

5. காட்டுஞ்ரியில் வெளியாகும் படைப்புக்களின் உரிமை படைப்பாளருக்கே.

6. சமர்ப்பிக்குமுன், தமது படைப்பிற்குத் தவறாமல் தலைப்பு இடவும். தலைப்பின் கீழ் எழுதியவரின் பெயர், தமது ஊரின் பெயர் ஆகியவற்றை எழுதி, அதன் பின் தமது ஆக்கத்தை எழுதத் தொடங்கவும்.

7. சமர்ப்பிக்கும் போது, படிவத்தில் பெயர், முகவரி, தொலைத்தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவாங்களைத் தவறாமல் குறிப்பிடுக.

சமர்ப்பிப்போர் கவனத்திற்கு

எழுத்தாளர் தமது படைப்புக்களை கீழேயுள்ள படிவத்தில் பதிவிட்டுச் சமர்ப்பிக்கவும்.

Please use the Submission Form below.

உங்கள் எழுத்துக்களை, கருத்துக்களை சமர்ப்பிக்க:

நேரடியாகக் கீழே உள்ள படிவத்தில் பதிவிட்டபின், Submit அழுத்தி அனுப்பவும்

வெளிநாட்டுக்காரர், வெளிமாநிலக்காரர், வெளிமாவட்டக்காரர் என பல வெளியூரார் எவ்வளவோ எழுதுகிறார்கள், செய்தி இதழ்களிலும் வெளியிடுகிறார்கள். அவை நமது பார்வைக்கு எட்டும்போது நாம் சிலவற்றை ஒப்புக்கொள்கிறோம், ஆ... இதுபோன்ற எண்ணம் நமக்குத் தோன்றவில்லையே என மனத்தின் ஓரத்திலொரு பொறி பறக்கிறது. சில சமயங்களில் படைப்புக்களை ஒப்புக்கொள்ள மறுத்து, இவை வெறும் பிதற்றல் என்கிறோம். ஏற்பதும் மறுப்பதும் அந்தந்த வாசகரின் சிந்தனைத் திறனுடன் தொடர்புடையவை.

உள்ளூர் சிந்தனைகள் முதலில் ஊருக்குள் உலாவிட சூழ்நிலை அமையுமாயின் மறுப்போமா? எழுதித்தான் பார்ப்போமே எனும் எண்ணம் எழும் அல்லவா? நண்பர், உறவினர் மற்றும் ஊரார் நம் எழுத்துக்களை வரவேற்பரா, அங்கீகரிப்பரா எனும் சந்தேகமும் உடன் தோன்றுமல்லவா?

முதலில் உள்ளூர் சிந்தனைகள் ஊராரைச் சென்றடைய வழிவகை வேண்டும். அவ்வாறு சென்றடையுமாயின் எழுதப்பட்டவை வாசிக்கப்படலாம். பலதரப்பட்ட வாசகர் அவ்வாறு வாசிக்கும் நிலையில், உள்ளூர்ப் படைப்புகள் அங்கீகரிக்கப்பட வாய்ப்புக்கள் ஏற்படலாம்.

இவ்வகையான வாய்ப்புக்கள் மூலம் பாராட்டப்பட்ட சிந்தனைகள் பின்னர் மேலும் பட்டை தீட்டப்பட சூழ்நிலைகள் உருவாகின்றன. அவை வெளியூர் சிந்தனைகளுடன் நிமிர்ந்து நின்று தோள் உரசவும் தயாராகின்றன.

மேலே கூறப்பட்டுள்ள ‘சிந்தனை’ என்பது, கட்டுரை, கவிதை, கதை, சிறு குறிப்பு, உள்ளூர் ச் செய்தி, ஏன், நகைச்சுவை, ஓவியமாகக்கூட இருக்கலாம். அனைத்தும் சிந்தனைகளை , செய்திகளை வெளிப்படுத்தும் வெவ்வேறு வடிவங்கள் தானே!

காட்டுஞ்ரியின் முதல் இதழுக்காக படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. காட்டுஞ்ரியில் வெளியீட்டிற்குத் தகுதிபெறும் அனைத்து படைப்புகளும் இணையம், ‘வாட்ஸ்ஆப்’ ஆகியவற்றில் PDF வடிவில் மின்னிதழாகக் கிடைக்கும். சூழ்நிலை அமையுங்கால், கையில் தவழும் இதழாகவும் வெளியிட முயற்சிக்கப்படும்! திறமை உள்ளோருக்கு இதுபோன்ற வாய்ப்பொன்று கிடைத்தால் நழுவவும் விடுவரோ?

இது ஒரு சோதனை முயற்சியே. இச்சோதனையின் வெற்றியை வாசகரே நிர்ணயிப்பர். காட்டுஞ்ரி செயல்பட, அதற்கு உதவிட ஓரிரு ஆர்வலர்கள் (Volunteers) முன்வந்தால் வரவேற்கப்படுவர்.

கிராமத்தின் சிந்தனைகள், செய்திகள் கிராமத்துக்குள், அதன் சுற்று வட்டாரத்துக்குள் ஊடுருவ உதவுவது இம்முயற்சியின் நோக்கங்களில் ஒன்று. ‘பகுதிநேர’ சிந்தனையாளர்கள் மெருகேறவும், தன்னம்பிக்கை பெறவும், வெளி உலகிற்கு இணையத்தின் மூலமாக, மற்ற ஊடகங்களின் வழியாக அறிமுகமாகவும் காட்டுஞ்ரி உதவும் என எதிர்பார்க்கிறோம்.

கற்க. கசடற எழுதுக. எழுத்தால் கற்பித்திடுக.

This page was created on Nov. 15, 2019

வாசகர் கவனத்திற்கு

'வாசகர் வார்த்தைகள்' Readers' feedback