குபேர விநாயகர் கோயில்
(This page is under construction! Look for updates!)
புதிய குபேர விநாயகர் கோயில் குடமுழுக்கு - மன்னங்காடு மேற்கு
ஸ்ரீ குபேர விநாயகர் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
Consecration of Newly Established Kubera Vinayakar Temple at Mannankadu (Mannangadu) West on June 21, 2013
விஜய ஆண்டு, ஆனி மாதம் 7ம் நாள், வெள்ளிக்கிழமை
மேலக்காடு முனியன் கோயிலை ஒட்டி அதன் வடக்குப் பகுதியில் புதிதாக எழுப்பப்பட்டுள்ள இக்கோயிலின் முதன்மைக் கடவுள் பிள்ளையார் (குபேர விநாயகர்). இக்கோயிலும் இதில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குபேர விநாயகர், நாகம், மூஞ்சுறு, பலிபீடம் ஆகிய அனைத்தும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டவை. கிராம மக்கள், வெளியூர், வெளிநாடுகளில் வசிப்போரின் பேராதரவுடன் திரு. எம். எஸ். முத்துசாமி அவர்களின் மிகுந்த முயற்சியின் பலனாய் இக்கோயில் மிகக் குறுகிய காலத்தில் உருப்பெற்றுள்ளது.
கர்பக்கிரகத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள குபேரவிநாயகரின் தோற்றம்.
சிலைகள் கோயிலுக்குள் நிறுவப்படுவதற்கு முந்தைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் கும்பம் கோயில் விமானத்தின் உச்சியில் முறைப்படி நிலைநிறுத்தப்படுகிறது.
கோயிலின் மகாமண்டபத்தின் முன் செய்யப்படும் பசுச்சடங்கு
வேதியர் செய்யும் விமானக்கலச குடமுழுக்குக் காட்சி.
மேற்கிலிருந்து கோயிலின் பக்கவாட்டுத் தோற்றம்.
வடமேற்கிலிருந்து கோயிலின் தோற்றம்.
கர்பக்கிரகத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள குபேரவிநாயகர் மற்றும் நாகம் (வலது).
மகாமண்டபத்திலிருந்து கர்பக்கிரகத்தின் தோற்றம்.
அர்த்தமண்டபத்திற்கும் மகாமண்டபத்திற்கும் இடையில் அமைந்துள்ள வேலைப்பாடுகள் அமைந்த தேக்குமரத்தாலான கதவுகள்.
கோயில் விமானத்தின் வேலைப்பாடுகள்.
கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருந்த சமயத்தில்... (பின்னணியில் மேலக்காடு முனியன் கோயில் வளாகம்)
.
Image courtesy: M. Sivakumar & D. Navaneetham Mannankadu (Mannangadu) This page was created on June 28, 2013