கண்ணுத்தோப்பு வீரனார்
Kannuthoppu Veeranar

கண்ணுத்தோப்பு வீரனார் கோயில் கட்டடம் எதுவும் இல்லாத திறந்தவெளி வழிபாட்டுத் தலமாகும். இது கண்ணுத்தோப்பு எனப்படும் தென்னந் தோப்புகளின் நடுவில் அமைந்துள்ளது. ஒரு மரத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ள ஒரு கல்லும், பெரிய அரிவாளும், விளக்குகளும் இத்தலத்தைக் குறிக்கும் அடையாளங்கள். சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் சில சுடப்பட்ட மண் சிலைகள் இருந்ததாகவும் அவை தற்போது சிதைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

கண்ணுத்தோப்பு வீரனார் கோயில். 
கல், நிற்க வைக்கப்பட்டிருக்கும் அரிவாள் மற்றும் இதர பொருட்களைக் காண்க.

கண்ணுத்தோப்பிற்கு நேர்கிழக்கில் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள உண்டியல்.

Mannankadu (Mannangadu)