பிள்ளையார் கோயில் - மன்னங்காடு தெற்கு

Pillaiyar Koil (Ganesh Temple), Mannankadu (Mannangadu) South

பிள்ளையார் கோயில் மன்னங்காடு கிராமத்தின் தென்பகுதியில், நெடுஞ்சாலையை ஒட்டி அதன் கீழ்புறம் அமைந்துள்ள ஓர் எழில்மிகு கோயிலாகும். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் உள்ளுறைக் கடவுள் பிள்ளையார் மட்டுமே. 1963ஆம் ஆண்டில் கட்டுமானத்திற்கான அடிமனையிடுதல் தொடங்கப்பட்டு 1971ல் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதன்பின் 1985ல் இரண்டாவது முறையும், 2006ல் மூன்றாவது முறையும் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. செவ்வக வடிவில் அமைந்துள்ள குளத்தின் தென்மேற்குப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் கட்டப்பட்ட சமயத்தில் இக்குளம் செங்கற்சூளைக்காக வெட்டப்பட்ட ஒரு சிறிய குட்டையாக இருந்ததாகவும், பின்னால் இது விரிவாக்கப்பட்டதாக இக்கோயிலின் நிர்வாகிகளில் ஒருவரான திரு. பாலையன் கூறுகிறார். இளம் வயதில் இறந்துபோன காயவர்ணம் என்பவரின் நினைவாக அவரின் பெற்றோர் இடம் மற்றும் பொருளுதவி தந்து இக்கோயிலை எடுப்பித்தனர் எனத்தெரிகிறது. அதன்பின் பொதுமக்களின் நன்கொடையின் மூலம் இக்கோயில் வேகமாக வளர்ந்து வருகிறது. சித்திரை முதல்நாள் மட்டும் விழாக்கண்ட இக்கோயில் சமீப ஆண்டுகளில் சித்திரையில் முதல் மூன்று நாட்கள் திருவிழா காண்கிறது. 2006க்குப்பின் முழுநேர அர்ச்சகர் நியமிக்கப்பட்டு அன்றாட கோயில் திருப்பணிகள் திறம்பட செய்யப்பட்டு வருகின்றன. இவ்வூரில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் இது காலத்தால் பிந்தியது எனக் கூறலாம்.

Located in the southern part of Mannankadu is the beautiful masonry temple structure for Pillaiyar (Lord Ganesha). Established in 1971 as a modest structure, this Pillaiyar Koil (temple) is now one of the prominent temples in Mannankadu, and saw its recent renovation and Consecration (Kumbabishekam) in 2006, which was third since its inception. The temple is located at the southwestern bank of a large rectangular pond. This temple sees its annual celebrations for three days starting on Tamil New year day, the first day of Chitthirai. This temple was built by the parents in memory of a young man, who had an untimely death in the early 1960s.

கர்ப்பக்கிரஹத்தில் அமைந்துள்ள பிள்ளையார் சிலை.
The main stone idol of Pillaiyar in the Sanctum Sanctorum.

அழகுற அமைந்துள்ள கோயில் விமானத்தின் வடக்குப் பகுதி.
Temple tower over the Sanctum Sanctorum. A view from north.

பசுமையான தோப்புப் பகுதியில் எழிலுற அமைந்துள்ள கோயில். நெடுஞ்சாலையிலிருந்து காணும் தோற்றம்.
Located in a beautiful surroundings the temple as seen from the highway

மூலவறைக் கடவுளின் மற்றொரு தோற்றம்.
 Another view of Pillaiyar in the Sanctum Sanctorum.

பெருமண்டபத்திலிருந்து (மஹாமண்டபத்திலிருந்து) கர்ப்பக்கிரஹத்தின் தோற்றம். கர்ப்பக்கிரஹத்திற்கும், மகாமண்டபத்திகும் இடைப்பட்ட அர்த்தமண்டபத்தில் இடப்புறம் அமைந்துள்ள உற்சவ மூர்த்தியான உலோகத்தாலான மற்றொரு பிள்ளையார் சிலை (படத்தில் பகுதி மறைத்திருக்கிறது). அர்ச்சகர் திரு. சி. கிருஷ்ணமூர்த்தி கோயிலின் அன்றாட திருப்பணிகளுக்குப் பொறுப்பேற்கிறார்.
A view from Mahamandapam. Temple priest Mr. S. Krishnamoorthy is on the left.

கோயிலின் உட்பகுதி.
The temple's interior as seen from the front.

கோயிலின் வடபுறத் தோற்றம்.
A view from north.

வடமேற்கு மூலையிலிருந்து கோயிலின் தோற்றம். மண்டபத்தை ஒட்டி கீழ்புறம் இணைக்கப்பட்டுள்ள கொட்டகைப் பகுதியில் (படத்தின் இடது பக்கம்) சமீப காலங்களில் பல திருமண நிட்சயதார்த்தங்கள் நடந்துள்ளன.
A view from northwestern corner.

கோயிலின் முன்பகுதியில் உள்ள விரிவாக்கப்பட்ட குளம்.
Part of a large rectangular pond located in front of the temple.

2006ல் (விய ஆண்டு, ஆவணி 15ம் நாள்; 31-8-2006) நடைபெற்ற மூன்றாவது குடமுழுக்கு பற்றிய விவரங்கள்.
Temple's third Consecration announcement in 2006.

Mannankadu (Mannangadu)