பட்டாணிக் கோயில்

Pattaani Koil

பட்டாணிக் கோயில் மன்னங்காடு கிராமத்தின் தென்பகுதியில், நெடுஞ்சாலையை ஒட்டி சாலையின் மேல்புறம் பசுமையான இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது. பக்கத்திற்கு ஒன்றாய் சாலையின் ஒருபக்கத்தில் பட்டாணிக் கோயிலும் மறுபக்கத்தில் தெற்கு மன்னங்காடு பிள்ளையார் கோயிலும் அமைந்துள்ளன. இந்த வழிபாட்டுத்தலம் ஒரு சிறிய காட்டுப்பகுதி போன்ற அடர்ந்த மரங்கள் அடங்கிய சோலையின் நடுவில் கட்டடம் எதுவுமின்றி ஒருமரத்தை மூல இடமாகக் கொண்டு அமைந்துள்ளது. இக்கோயிலை ஒருசிலரே பின்பற்றி வழிபட்டு வருகின்றனர். இதன் வரலாறு அறியப்படவேண்டும்.

ஒரு எண்ணெய் விளக்கு தொங்கும் இம்மரமே பட்டணிக் கோயிலின் மூல இடமாகும்.

இந்த மரங்களடர்ந்த பகுதியின் நடுவில் பட்டாணிக் கோயில் உள்ளது.

சுடப்பட்ட குதிரைச் சிலை பட்டாணிக் கோயிலின் முன் வைக்கப்பட்டுள்ளது.

நெடிய பனை மரங்களால் இத்தலம் சூழப்பட்டுள்ளது.

நீண்ட வரிகளை உடைய இந்த மரம் இச்சிறு காட்டின் ஒரு பகுதி. இதுபோன்ற மரங்கள் ஊரில் வேறெங்கிலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருகாலத்தில் பலவகைப்பட்ட மரங்களை உள்ளடக்கிய இக்காடு பின்னால் அழிக்கப்பட்டு தப்பிப் பிழைத்து எஞ்சியிருக்கும் மரங்களில் ஒன்றாக இது இருக்கலாம்.

தென்னந்தோப்பின் ஒரு பகுதியாக உள்ள பட்டானிக் கோயில். சாலையிலிருந்து காணும் தோற்றம்.

Mannankadu (Mannangadu)