மேலக்காடு முனியன் கோயில்

Muniyan Koil - Mannankadu (Mannangadu) West

மேலக்காடு முனியன் கோயில் (முனியய்யா கோயில்) கிராமத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்து, மேலத்தெருவுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறிய சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. சிறிது காலத்திற்கு முன்புவரை கட்டடமின்றி திறந்தவெளி வழிபாட்டு இடமாக இருந்த இந்த முனியன் கோயில் தற்போது விசாலமான கட்டடத்தின் உள்ளே வடக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக மேலக்காடு மக்களின் பேராதரவைப் பெற்ற இந்த கோயில் சுற்றுச் சுவரால் சூழப்பட்டு பலவகை மரங்களையும் புதர்களையும் உள்ளடக்கி அமைந்துள்ளது.

Located in northwestern Mannankadu, Melakkadu Muniyan Koil was once in an open area. Essentially celebrated by the residents of Melakkadu, this place of worship currently has a permanent concrete roof over it and is located in the middle of a wooded area.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மேலக்காடு முனியன் கோயிலின் தோற்றம்.

ஓவியர் மன்னங்காடு சிவகாரிமுத்து தாம் சிறுவயதில் கண்ட வழிபாட்டிடத் தோற்றத்தை தம் நினைவிலிருந்து எழில்மிகு படமாகித் தந்திருக்கிறார்.

Native artist Sivakarimuthu's watercolor portrays his nostalgia.

கான்க்ரீட்டில் வடக்கு நோக்கி அமைந்த இந்த மண்டபத்தின் தென் கடைசியில் முனியன் கோயிலின் மைய வழிபாட்டு இடம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்சிகளும் அவ்வப்போது நடைபெறுகின்றன.

வடக்கு நோக்கிய எளிமையான மைய வழிபாட்டிடம். North-facing primary worship area.

மண்டபத்தின் கீழ்புறத்தில் அமைந்துள்ள மடைப்பள்ளி.

மேலக்காடு முனியன் கோயில் ஆலமரம் போன்ற உயர்ந்த மரங்களையும், பலவகைச் செடிகளையும் உள்ளடக்கி ஓர் அழகான சோலைக்குள் அமைந்துள்ளது.

மேலக்காடு முனியன் கோயில் வளாக நுழைவு வழி.

புதிதாக அமைக்கப் பட்டுவரும் மேலக்காடு பிள்ளையார் கோயில்.

A new Pillaiyaar Koil is being built in a site adjacent to Melakkadu Muniyan Koil.

முனியன் கோயில் வளாகத்தின் வடக்கில் சுற்றுச்சுவரை ஒட்டி புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் மண்டபத்துடன் கூடிய பிள்ளையார் கோயிலின் தோற்றங்கள். திரு. எம். எஸ். முத்துசாமி அவர்களின் முயற்சியில் கட்டடப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

Mannankadu (Mannangadu) Created on April 4, 2013