முனியன் கோயில் Muniyan Koil Mannankadu (Mannangadu) முனியன் கோயில் என அழைக்கப் பட்டாலும் இக்கோயில் பல கிராமியக் கடவுட்களை தன்னகத்தே கொண்டு மன்னங்காடு கிராமத்தின் முக்கிய சந்திப்பான முச்சந்தியின் வடமேற்குப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இக்கிராமத்தில் உள்ள வழிபாட்டு இடங்களில் பழமையான, அளவில் பெரிதான கோயிலாக இதைக்கொள்ளலாம். ஐந்து முனியன் சிலைகள் திறந்தவெளியில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை இடமிருந்து, குதிரை மீதமர்ந்த வீரமுனி, வடிவில் சிறிய தவசுமுனி, வடிவில் பெரிய செம்முனி, வாழ்முனி மற்றும் கருமுனி ஆகும். மிகநேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள செம்முனி, வாழ்முனி, கருமுனி சிலைகள் கையில் வாலேந்தி ஏறத்தாழ ஒரேமாதிரியான ஆபரணங்களைத் தரித்திருந்தாலும் அமைப்பில் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. வடக்குநோக்கி அமர்ந்துள்ள இம்மூவரின் நெற்றியைக் கூர்ந்து நோக்கினால் செம்முனி சைவசமயத்தை குறிக்கும் திருநீற்றுப் பட்டையையும், வாழ்முனி வைணவ சமய வடகலை நாமத்தையும், கருமுனி வைணவ தென்கலை நாமத்தையும் தரித்திருப்பதைக் காணலாம். (மேலே 2009; கீழே 2017). (கீழ்வரும் படங்கள் இந்த மூன்று சிலைகளையும் பெரிதாக்கிக் காட்டுகின்றன). ![]() செம்முனி (செம்முனீஸ்வரர் ) |