குட்டப்புளி

குட்டைப்புளி

Kuttappuli - Mannankadu

மன்னங்காடு கிராமத்தின் வடகிழக்கில், சருவனோடைக்கும் பாட்டுவனாச்சி காட்டாற்றிற்கும் இடையில் வயல்வெளியில் குட்டப்புளி வழிபாட்டுத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் குட்டப்புளி குளத்தின் கீழ்கரையில் ஒரு பரந்து விரிந்த ஆலமரத்தின் அடியில் உள்ளது.

சருவனோடையிலிருந்து குட்டப்புளியின் காட்சி.

நெல்வயல்கள் சூழப்பட்ட குட்டப்புளி குளம் மற்றும் அதன் கீழ்கரையில் உள்ள அடர் மரச்சோலை.

சோலையின் நடுவில் அமைந்துள்ள இந்த ஆலமரந்தான் குட்டப்புளி முனியனின் இருப்பிடம்.

ஆலமரத்தடி வழிபாட்டுத் தலத்தின் வேறு கோணங்கள்.

ஆலங்கனிகளுடன் மரத்தின் மற்றொரு தோற்றம்.

2006 ஜனவரியில், நீர் நிறைந்த சருவனோடையும் அதன் கரையில் உள்ள ஆலமரமும் (வலது கோடியில்). வலுவான காற்றில் இந்த ஆலமரம் விழுந்துவிட்டதால் தற்போது சருவனோடையில் மரங்கள் ஏதும் இல்லை. ஓடையின் பின்னணியில் குட்டப்புளி வழிபாட்டுத்தலம்.

நீர் நிரம்பிய சருவனோடையின் பின்னணியில் மன்னங்காடு கிராமம். கிராமத்தின்மேல் கதிரவன் மறையும் காட்சி.

நெடும்புளி

Nedumpuli - Mannankadu

குட்டப்புளியின் கீழ்புரத்தில் ஒரு புளியமரத்தை ஒட்டி உள்ள ஒரு சிறிய குளமே நெடும்புளி எனப்படுகிறது. பாட்டுவனாச்சிக்கு மிக அருகில் உள்ள இக்குளம் ஆடு மாடுகளுக்குப் பயனுள்ள நீர்நிலையாக உள்ளது. பின்னணியில் தெரிவது பிச்சினிக்காடு கிராமம்.

Mannankadu (Mannangadu) Created on April 6, 2013