இனியன்டார் கோயில்

Iniyandaar Koil

இனியன்டார் அல்லது இனியாண்டார் என அழைக்கப்படும் இக் கோயில் 2009ற்கு முன்பு சிலையையோ, தனிப்பட கட்டடமோ பெற்றிருக்கவில்லை. தென்னங் கீற்றினால் வேயப்பட்ட சிறு கொட்டகையினுள் ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த துணிகளும் சில கருவிகளுமே இனியன்டாரின் இருப்பிடமாகும். இருப்பினும் இனியன்டார் பொதுமக்களின் ஏகோபித்த அன்பைப்பெற்றிருந்தார். இதன் காரணமாகவே பல்வேறு தரப்பினரும் அன்புடன் பொருளுதவி தர, இவ்விடம் விசாலமடைந்து இப்போதுள்ள நிலையைப் பெற்றிருக்கிறது.

இனியன்டார் கோயிலின் அமைப்பு. 2009 (மேலே) மற்றும் 2011ல் (கீழே) எடுக்கப்பட்ட படங்களை ஒப்புநோக்கவும். 'கான்க்ரீட்'ல் புதிதாக நான்கு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. 2009க்கு முன்பு இவ்விடத்தில் சிலை ஏதும் இருந்ததில்லை. ஆலமரத்தின் சில வேரூன்றிய விழுதுகள் புதிய கட்டுமானங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன.

General layout of Iniyandaar Koil in May 2009, top and November 2011, bottom. Four large concrete statues under the open sky and a main deity inside the building are add since 2009. Note certain pillar roots of the banyan tree are removed to make room for new constructions.

புதிதாக அமைக்கப்படுகின்ற கோயிலின் முதன்மைக் கட்டடம் (இடது), உள்ளே முதன்மைக் கடவுள் இனியன்டார் சிலை (வலது).

The main structure, left, and the close-up on the right showing the main deity, Iniyandaar.

புதிதாக திறந்தவெளிப் பகுதியில் எழுப்பப்பட்டுள்ள பசுமையான பின்னணியுடன் விளங்கும் சிலைகள்

Newly added statues.

பரந்து விரிந்துள்ள இந்த ஆலமரம் கோவிலின் ஒரு பகுதியாகும். பண்டைப் புயல் ஒன்றில் இப்போதிருப்பதைவிடப் பெரிய ஆலமரமொன்று இதற்கு கிழக்கில் இருந்து விழுந்து, அதன் விழுதிலிருந்து தோன்றியதே இப்போதுள்ள மரமாகும். இம்மரம் தற்போது தெற்கு நோக்கி கிளைகளை நீட்டி விழுதுகளை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

This banyan tree adds ambiance to the location. Considered to be part of the temple complex, this tree's source was originally located farther east from current location when a cyclone wrecked it sometime in 1950s. A small pillar of it survived and continue to thrive to its current form. This banyan tree is now appear to be 'walking' south as it has several established pillars in that direction.

Mannankadu (Mannangadu)