ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மன்னங்காடு Panchayat Union Middle school, Mannankadu (Mannangadu) மன்னங்காடு பள்ளிக்கு தாமரங்கோட்டை கல்லூரியின் கொடை தாமரங்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் பி.எட். கல்லூரியின் தாளாளர் திரு. ஆர். வீரப்பன்
அவர்கள் மன்னங்காடு அரசு பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கென ரூ. 20,000
மதிப்புள்ள கணினியை அருள்கூர்ந்து 2.2.2012 அன்று வழங்கினார். தாளாளர் திரு. ஆர். வீரப்பன் அவர்கள்
முன்னிலையில் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு. கே. அருள் கணினியை
வழங்க மன்னங்காடு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சௌந்தரராஜன்
பெற்றுக்கொள்கிறார். உடன், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள். தாமரங்கோட்டை ஸ்ரீ குமரன் பி.எட். கல்லூரி முதல்வர் முனைவர் அசோக்ராணி அவர்கள் கணினித் தொடர்புடைய பொருள்களை வழங்க மன்னங்காடு
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சௌந்தரராஜன் அவர்கள்
பெற்றுக்கொள்கிறார். உடன் இடமிருந்து, தாளாளர் திரு. ஆர். வீரப்பன், மருத்துவர் வீ. ராஜா ராமலிங்கம், திரு. கே. அருள், திரு. தி. வீராசாமி ஆகியோர். மன்னங்காடு நடுநிலப்பள்ளியின் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கட்டடம். கணினி அறை இக்கட்டடத்தின் வலப்பகுதியில் அமைந்துள்ளது. பள்ளியின் மற்றொரு தோற்றம். |