venkatg

மன்னங்காடு கோ. வெங்கடேஸ்வரன் படைப்புகள்

....நன்றி!

உனை ஏனடி கண்டேன்?

ஒற்றுமையாயிருந்த கண்களுக்குள் மூன்றாம் உலகப்போர்!

உனை ஏனடி ரசித்தேன்?

தொன்னூறு டிகிரியே தோற்கும்படி சிலிர்ப்பில் நேராய்

நிற்கும் என் ரோமம்!

நான் ஏனடி துவண்டேன்?

உன் பெயரின் முதலெழுத்து

வர்கத்தைக் கேட்டாலே

இதயத்துடிப்பே துடிக்க மறுக்கிறது!

எனை ஏனடி வென்றாய்?

கண்டேனென்றா! அல்ல

ரசித்தேனென்றா!?

பதில் அறியாவிட்டாலும்

உனை அழகியாய் அழகூட்டிய

'அழகு'க்கு ஒர் நன்றி.

uuu

....நிதர்சனம்!

கால்சட்டை எது !மேல்சட்டை எது ! அடையாளம் தெரியாமல் உருட்டியணைத்து வாளிக்குள் முக்கி,

துணிகளைத் தலை குழிக்க வைத்து மூழ்கடிப்பாள்,

அதோடு போர் தொடுப்பாள்

பின்னர் கயிறு திரிப்பாள்

ஈரத்தை தூரமாய் விரட்டியடிக்க

காற்றோடு மீண்டும் ஒரு போர்!

வெயிலில் அதன் உடல் துவட்டப்படும்போதே

அழையா விருந்தாளியாய் வந்த கார்மேகம்;

அம்மியிடம் குழவியைப் பொறுப்பேற்க வைத்து

ஓடோடி வந்து உலர்ந்ததைப் பிரித்து

மட மடவென்று மார்போடு மடக்கி மடித்து

இத சூட்டோடு முகத்தை அதோடு அணைத்தால்

மூக்கைத் துளைத்து முந்தியடித்து செல்லும்

சலவை வாசத்திற்கு

இணையை இன்றும் தேடிக்கொண்டே இருக்கிறது

அடித்து துவைக்கும் அம்மா சமுதாயம்!

uuu

....பாவம்!

மேள தாள கரகோஷங்களுடன் அழைப்பிதழிலிட்டபடி ஒன்பது மணிக்கு முடிந்தது இருபது மாலையை கடலோரத்தில் காதலைக் கவிதைகளாய் பகிர்ந்த அவன்-அவள் கலப்பு திருமணம்!

சந்தோஷ முன்னணிக்காகவும் குடும்பத்தின் துக்க பின்னணிக்காகவும்

அவனால் 'தற்கொலை' நடுவராக பொறுப்பேற்று நடத்திய மணம் அது!

வளர்ப்பில் குறை கூறிவிடுவார்களோ என்று மணமகள் அலங்கார அறையில் அழுகையால் அலங்கரித்துக்கொள்ள அவன் தாய் என்ன பாவம் செய்தாளோ?

uuu

.....மாற்றம்!

காணாத காட்சி ஒன்று

புதிதாய் காணும் பொழுது

கண்ட விழிகளுக்கு முரணாய் தோன்றின்,அஃது

மூதாதயரின் மூடர் தனமோ?

இலக்கணத்தின் மறுபிறப்போ?

சூழலின் சூட்சமமோ?

இயல்பின் ஒவ்வாமையோ?

காலத்தின் கள்ளத்தனமோ?

நாகரீகத்தின் எதிர்மறையோ?

வழக்கத்தின் வழக்கொழிவோ?

யாம் காணும் நாளை பொழுதிலும் முரண் விழிகள் தோன்றுமாயின், இனி மாற்றம் என்பது மாறுவேடமாகும்!

uuu

....பெயர்!

ஜனனம் முதல் மரணம் வரை

தனி மனிதஇலக்கணம்

இயற்றுவதற்கு தொடர்ந்த

ஒர் யதார்த்தப் பிழை

மெய்யோ பொய்யோ!

குறிப்பாகவோ காரணமாகவோ

பொருளாய் படைத்தது இறையெனில் பொருத்தமாய் படைக்கப்பட்ட கருப்பொருளே பெயர்!

இடம் தேடி செல்லும்போது

நிலை தடுமாறாமலிருக்க

இயற்கையில் செயற்கையாய்

வகுத்த தடம்!

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அழைக்க வாய்த்த நியதி!

uuu

...வெட்கத்தின் விளிம்பில்!

யாவரும் மனிதனே! என்றால்

'பெண்ணுரிமை பறிபோனது'

என்று பெண்கள் உலகில்

ஓர் ஆதங்கம்!

யாவரும் மனிதன் மனிதியே!

இப்படி சுட்டிக்காட்டினால் தட்டிக்

கேட்க மூன்றாம்பால் எங்கே ?

என் மனதிலோர் ஆதங்கம்!

ஹார்மோனுக்குள் மூண்ட போரில்

வென்றது எதுவோ?

வென்ற பேரரசனோ கலியுகத்தில்

வேந்தனாய் பிறக்கிறான்

சமயத்தில் வென்றது

சிற்றரசனென்றால்

மூன்றாம் தேசமாய் முடுக்கில்

முடங்கிக் கிடக்கிறான்.

வெட்கத்தின் விளிம்பில்

தாய்ப்பாலூட்ட மறுத்து

பாழாய்போன உலகில்

தள்ளப்பட்ட ஜீவராசிகள்!

ஒற்றைக்காலெனும் உரிமையைத்

தேடும் இம்முக்காலிகளுக்கு

நாற்காலியில் அமர்ந்து இந்நாடகத்தைக்

கேலிப்பது சரியன்றோ?

uuu

....இப்படிக்கு நான்!

அதிரூபஅழகுசுந்தரியாய் இருந்தால் இருந்துகொள

அதற்காக என் வார்த்தைகள் வரவில்லையென்று நான் இப்போது சொல்லவேண்டியது அவசியம்;

ஒரு இரும்பு மனிதனாய் என் போக்கில் போய்க்கொண்டிருப்போமென்று நடையை தொடர்ந்தால் காந்த புயல் ஒன்று தாக்க அதற்கு நீயிட்ட பெயரோ 'அன்பு'! .

என் பங்கை உன்னிடம் வெளிப்படுத்த என் அன்பை REFRIGERATOR-ல் வைத்து பதம் மாறாமல் காத்துகொண்டிருக்கிறேன்,"

இனி அவள் அழகில் பாடாய் பட போகிறாய்" என்று என் மனம் எச்சரிக்கும்பொழுதும் நான்

வாயடைத்துப்போய் நிற்கும்பொழுதும் என் அவசியமற்ற வார்த்தைகளுக்கு பூட்டு போடுவது அவசியம்.

இப்படிக்கு உன் அழகில் விழுந்த நான்!

uuu

...பொய்மை!

ஏமாற்றத்தோடு பிறந்து

எழுத்தால் வளர்ந்து

காற்றில் கார்பனோடு கலந்து

கலைச்சின்னத்தோடு பிறந்த காவியத்தலைவன்!

புராணம் என்றோர் உலகுண்டு

அதில் இவனே மூடிசூடா மன்னன்

கவிஞன் என்றோர் இனமுண்டு

இனத்தார் ஊட்டி வளர்த்த

செல்லப்பிள்ளையும் இவனே!

கற்பனையை மணந்து

கவிதையைப் பெற்றெடுத்தவன்

பிள்ளைகளுக்கு இனிப்பை அளித்தவன்

கசப்பை அரவே அழித்தவன்!

நயத்தோடு வஞ்சி புகழ்பவன்

ஆதலால் "நயவஞ்சகன்"

இவனது புனைப்பெயர்!

uuu

கோ. வெங்கடேஸ்வரன் படைப்புகள். Copyright © 2016 G. Venkateswaran, Mannankadu

தொடர்புக்கு:

கோ. வெங்கடேஸ்வரன்

மன்னங்காடு அஞ்சல்

தாமரங்கோட்டை வழி

தஞ்சாவூர் மாவட்டம் 614 613

G. Venkateswaran, Mannankadu Post, Thamarankottai Via, Thanjavur District 614 613

இப்பக்கத்தில் புதிய படைப்புகள் கடைசியாக சேர்க்கப்பட்ட நாள் December 16, 2016