சுந்தர்ராஜ் அவர்களின் படைப்புகள் 

ஆன்மீக மற்றும் பக்திச் சிந்தனைகளில் மிக்க ஈடுபாடுடைய மன்னங்காடு சுந்தர்ராஜ் (அ. சோமசுந்தரம்)
தம்முடைய படைப்புகளில் சிலவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

அம்மையப்பனே!

அனுதினமும் உனைத் தொழுவேனே!

அற்புதக் கூத்தினை

அனுதினமும் செய்வோனே!

அணுவின் அணுவாகி

அருட்பெரும் பெரோளியாகி

அண்டங்களும் பிரகாசித்திட

அளப்பரியா ஆற்றலாகி

அனைத்தயும் தனதாக்கி

அன்னையினும் கருணையாகி

அன்பின் பொருளாகி

அகிலங்களை ஒன்றாக்கி

அடிமுடியைத் தேடவைத்து

அண்ணாமலையாக உருவாகி

அன்னையாய் அப்பனாய்

அழகிய நடனமாடி

அடியாரின் இதயவாசியாகி

அறம்புகழும் சித்தனாகி

அருவமாகி உருவமாகி  

அறுபத்து நான்கு கலையுமாகி

அதிரவைக்கும் கலைஞனாகி

அக்கினியாகி அன்னமாகி

அருங்குளிராகி அறிவுத்திறனாகி

ஆடலாகி பாடலாகி

ஆனந்தப் பரப்பிரம்மமாகி

ஆட்சியும் செய்கின்றாய்!

ஆறுசக்கரப் பூக்களிலும்

ஆயிரமிதழ் தாமரையிலும்

ஆனமாவையும் கவனித்திடவே

அம்மையப்பனே!

அனுதினமும் உனைத்தொழுவேனே! 


மன்னங்காடு சுந்தர்ராஜ் படைப்புகள் Copyright © 2012, Sundarraj, Mannankadu

தொடர்புக்கு:
மன்னங்காடு அஞ்சல் 
தாமரங்கோட்டை வழி
தஞ்சாவூர் மாவட்டம்
614 613 

Sundarraj, Mannankadu Post, Thamarankottai Via, Thanjavur District 614 613