Butterflies

Science and Nature

இயற்கை வளம் - Biodiversity of Mannankadu

மன்னங்காடு கிராமத்தில் பரவலாகக் காணப்படும் வண்ணத்துப்பூச்சிகள்

இப்பக்கத்தில் மன்னங்காட்டின் பல்வேறு இடங்களில் நான் நேரடியாக பார்த்த வண்ணத்துப்பூச்சிகளை இனம்கண்டு தொகுக்க முயற்சி செய்திருக்கிறேன். 2014ம் ஆண்டிலிருந்து வயல், தோப்பு, குளம், ஓடை மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள் கவனிக்கப்பட்டு படம்பிடிக்கப்பட்டு இனம் காணப்பட்டுள்ளன. படம் பிடிக்கப்பட்ட இடங்களும் கொடுக்கப் பட்டுள்ளது. இப்பட்டியல் முழுமையானதன்று. மேலும் சில வண்ணத்துப்பூச்சிகளின் இனங்கள் கண்டுபிடிக்கப்படும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. வண்ணத்துப்பூச்சிகளின் ஆங்கிலப் பெயர்களுடன், அறிவியல் பெயரும் அவற்றின் உள்ளூர் மற்றும் பொதுவாக வழக்கில் உள்ள தமிழ்ப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் சுட்டிக்காட்டவும். - அன்பன் து. நவநீதம்.

உதவி நூல்: வண்ணத்துப்பூச்சிகள்: அறிமுகக் கையேடு. ஆர். பானுமதி. Cre-A publishers, 2015. ISBN 978-93-82394-13-6

இணையம்: www.ifoundbutterflies.org, www.learnaboutbutterflies.com

படங்கள்: நவநீதம் து. & துரை ஆ.ந.

Butterflies of Mannankadu
Butterflies of Mannankadu - படங்கள்

Page establised - Sep 2016