Science and Nature இயற்கை வளம் - Biodiversity of Mannankadu மன்னங்காடு கிராமத்தில் பரவலாகக் காணப்படும் பறவைகள் இப்பக்கத்தில் மன்னங்காட்டின் பல்வேறு இடங்களில் நான் நேரடியாக பார்த்த பறவைகளை பறவையியல் நூல்கள் அடிப்படையிலும், வல்லுனர்களின் ஆலோசனையின் பேரிலும் இனம்கண்டு தொகுக்க முயற்சி செய்திருக்கிறேன். 2011ம் ஆண்டிலிருந்து வயல், தோப்பு, குளம், ஓடை மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பறவைகள் கவனிக்கப்பட்டு படம்பிடிக்கப்பட்டு இனம் காணப்பட்டுள்ளன. படம் பிடிக்கப்பட்ட இடங்களும் கொடுக்கப் பட்டுள்ளது. இப்பட்டியல் முழுமையானதன்று. மேலும் சில பறவைகளின் இனங்கள் கண்டுபிடிக்கப்படும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. பறவைகளின் ஆங்கிலப் பெயர்களுடன், அறிவியல் பெயரும் அவற்றின் உள்ளூர் மற்றும் பொதுவாக வழக்கில் உள்ள தமிழ்ப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் சுட்டிக்காட்டவும். - அன்பன் து. நவநீதம். உதவி நூல்கள்:1. பறவைகள்: அறிமுகக் கையேடு. ப. ஜெகநாதன், ஆசை. Cre-A publishers, 2014. 2. Common Birds of
Indian Subcontinent: A Field Guide. Ananda Banerjee. Rupa Publications, 2015. 3. The Book of Indian
Birds. Salim Ali. Bombay Natural History Society, 1977. வல்லுனர் ஆலோசனை: Dr. Panchapakesan Jeganathan Scientist, Nature Conservation Foundation Mysore, India
Page establised - Jan 2016 |